Laddu Vinayakar : வேலூரில் 606 கிலோ எடையில் உருவான லட்டு விநாயகர்! மக்கள் ஆர்வம்! - vinayakar statue
Published : Sep 18, 2023, 1:32 PM IST
வேலூர்:விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 606 கிலோ லட்டால் செய்யபட்ட தண்டாயுதபாணி விநாயகரை காண பக்தர்கள் குவிந்தனர். குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (செப். 18) நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ ஜோதி லட்டு விநாயகர் ஆலயத்தில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும் தீப ஆராதனையும் செய்யபட்டது. இக்கோயிலில் 27ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 606 கிலோ எடை கொண்ட தண்டாயுதபாணி விநாயகரின் சிலை அமைக்கப்பட்டது.
பிரமாண்டமாக உருவாக்கபட்ட லட்டு விநாயகரை பக்தர்கள் சாமி தரிசித்து சென்றனர். லட்டு விநாயகரை காண காலை முதல் அப்பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை காண பொது மக்கள் திரண்டனர். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 555 கிலோ எடையிலான சிவன் தோற்றத்திலான விநாயகர் லட்டால் வடிவமைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ ஜோதி லட்டு விநாயகர் ஆலயத்தில் கிலோ கணக்கிலான லட்டு விநாயகர் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.