விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் - ஓடி வந்து உதவிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ! - விபத்தில் காயமடைந்த இளைஞர்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள திட்டங்குளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் ஒரு இளைஞருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. மற்றொரு இளைஞருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக காரில் சென்ற விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், இதனைக் கண்டதும் தனது காரை விட்டு இறங்கி காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்து முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
பின்னர், அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் எட்டையாபுரம் அருகே உள்ள சுந்தரேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:உணவு டெலிவரி ஊழியர் வெட்டி கொலை, வீட்டை சூறையாடிய ஊர் மக்கள்; நெல்லையில் பரபரப்பு!!