தமிழ்நாடு

tamil nadu

Video:இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு விஜய பிரபாகரன் மற்றும் கவிஞர் சினேகன் அஞ்சலி

ETV Bharat / videos

Video:இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் உடலுக்கு கவிஞர் சினேகன், விஜயபிரபாகரன் அஞ்சலி - சென்னை செய்திகள்

By

Published : Feb 5, 2023, 5:31 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

சென்னை:இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று மறைந்ததை ஒட்டி, அவரது உடலுக்கு விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், பேட்டியளித்த விஜய பிரபாகரன், ’இயக்குநர் டி.பி.கஜேந்திரன் அப்பாவுடன் பேரரசு, கஜேந்திரா ஆகியப் படங்களில் நடித்துள்ளார். அவர் ரொம்ப நல்ல மனிதர். நான் சிறுவயதில் இருந்து அவரைப் பார்த்து வருகிறேன். போய் அஞ்சலி செலுத்திவிட்டு வா என்று அப்பா சொன்னார். அப்பாவின் சார்பாகவும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் தேமுதிக கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், கவிஞர் சினேகன் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு பேசுகையில், 'என்னை மகன் மாதிரி பார்த்தார். என்னை கவிஞரய்யா என்றுதான் அழைப்பார். மிகவும் மரியாதையானவர். தமிழ் சினிமாவில் சிறு கலைஞர்கள் பலரையும் வளர்த்துவிட்டவர். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்றார். 

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details