Video: பொதுமக்களுக்கு தக்காளி வழங்கிய விஜய் சேதுபதி ரசிகர்கள்!
சென்னை:தமிழ்நாடு முழுவதும் தக்காளியின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது. இதனால், பெரிய பெரிய உணவகங்களில் கூட தக்காளியைப் பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய மக்களின் நிலைமை இன்னும் பரிதாபகரமாகவுள்ளது.
இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் ஆலந்தூர் பகுதியில் இலவசமாக இல்லத்தரசிகளுக்கு தக்காளி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவை செங்கல்பட்டு விஜய் சேதுபதி ரசிகர்கள் தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான விஜய் சேதுபதி ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு தக்காளிகளை வழங்கினர்.
இதுகுறித்து இல்லத்தரசி பெண்கள் கூறுகையில், ''தக்காளியின் விலை கடுமையான விலையேற்றத்தின் காரணமாக சாமானிய மக்களாகிய எங்களுக்கு கடைகளில் தக்காளி வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இலவசமாக எங்களுக்கு தக்காளி வழங்கிய விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நன்றி'' எனப் பெண்கள் கூறினர். விஜய் சேதுபதி ரசிகர்கள் செய்த இந்தச் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:சாதிய கருத்துகள் இருப்பதால் மாமன்னன் படத்தைப் பார்க்கவில்லையா? - கடுப்பான அன்புமணி!