புஸ்ஸி ஆனந்த் பூரண குணமடைய வேண்டி கோவையில் மும்மத சிறப்பு பிரார்த்தனை! - மும்மத வழிபாடு
Published : Nov 3, 2023, 7:21 PM IST
கோயம்புத்தூர்:உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பூரண நலன் பெற வேண்டி கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் மும்மத சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
முன்னதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புஸ்ஸி ஆனந்தை, நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில், கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், அவ்வியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூரண நலம் பெற வேண்டி மும்மத சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி, இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோணியம்மன் கோயில், அதே பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் பேராலயம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள ஹஜ்ரத் ஜங்கல்பீர் அவுலியா தர்காஹ் ஆகிய இடங்களில் மும்மத சிறப்பு வழிபாடு செய்தனர்.