தமிழ்நாடு

tamil nadu

அன்னதானம் விழாவை தொடங்கி வைத்த புஸ்ஸி ஆனந்த்

By

Published : May 28, 2023, 10:52 PM IST

ETV Bharat / videos

உலக பட்டினி தினம் - அன்னதானம் விழாவை தொடங்கி வைத்த புஸ்ஸி ஆனந்த்!

திருச்சி:உலக பட்டினி நாள் (World Hunger Day) இன்று (மே 28) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க 'விஜய் மக்கள் இயக்கம்' அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அந்தவகையில், திருச்சி கீழப்புலி வார்டு சாலையில் உள்ள புனித அந்தோணியார் கோயில் தெருவில் இன்று அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில், விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, ஈபி ரோடு சாலையிலிருந்து புஸ்ஸி ஆனந்தை வரவேற்க ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் சால்வை அனுபவித்தும் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து இருசக்கர வாகனத்தை அவரை ஒட்டிக்கொண்டு அன்னதானம் போடும் இடத்திற்குச் சென்றார். அங்கு அங்கிருந்த பெண்கள், பூரண கும்பம் மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்து ரோஜா இதழ் பூக்களை தூவி வரவேற்றனர்.

அன்னதானத்தை தொடங்கி வைத்து அனைவருக்கும் சிக்கன் பிரியாணியை பரிமாறினார். பின்னர் குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிட்டு குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார். இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. இதேபோல் கேரளா, ஆந்திரா புதுவையிலும் இன்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்தும் திருச்சி விஜய் ரசிகர்கள் திருப்பு முனை மாநாடு நடத்தபப்டும் என சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

இதையும் படிங்க:World Hunger Day: மயிலாடுதுறையில் 1000 பேருக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

ABOUT THE AUTHOR

...view details