Video:உலக புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - திருத்தேரோட்டம் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்தது
108 திவ்யதேசங்களில் ஒன்றான உலக புகழ்பெற்ற விருதுநகர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் இன்று (ஆகஸ்ட் 1)கோலாகலமாக நடைபெற்றது. கரோனா பரவல் தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட திருவிழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.தேரோட்டத்தை அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி. மாவட்ட நீதிபதி, தக்கார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
devotees partcipated