"ஆடு பாம்பே விளையாடு பாம்பே".. பின்னிப் பிணைந்து ஆனந்த நடனம்! - பாம்பு வீடியோ
வேலூர்: குடியாத்தம் அருகே உள்ள புவனேஸ்வரி பேட்டை பகுதியில் தனியார் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. அந்த சுவர் அருகே இன்று காலை 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து மகிழ்ச்சியாக நடனம் ஆடிமாடிக் கொண்டிருந்தது. சுமார் நான்கு அடி உயரத்திற்கு பின்னிப் பிணைந்து நடனமாடிய அந்த பாம்புகளை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் பாம்புகள் நடனமாடியதை செல்போனில் பதிவு செய்தனர். தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் பகிர்ந்த பாம்பு நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாம்புகள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பின்னிப் பிணைந்து ஆனந்த நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
பின்பு அருகில் இருந்த புதருக்குள் இரண்டு பாம்புகளும் சென்று மறைந்து கொண்டன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. மேலும் பள்ளி நேரங்களில் இது போன்று பாம்புகள் வந்தால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.