Video: அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த மாணவிகள்!
சண்டிகர் அருகே மனிமஜ்ரா நகரில் உள்ள இந்திரா காலனி அரசுப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிபவர், ராஜ் வகில் சிங். இவர் கடந்த சில ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் மிகுந்த பாசத்தோடும், கனிவோடும் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் கிடைத்துள்ளது. இதனை அறிந்து அப்பள்ளி மாணவிகள் அனைவரும் ஆசிரியையை பிரிவதை நினைத்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். இதன் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
ராஜ் வகில் சிங்