Video: சிசிடிவி ஆதாரம் கொடுத்தும் கிடப்பில் போடப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் புகார் - DGP
சென்னை திருமங்கலம் சவுந்தர்யா காலனியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற நீதிபதி பால்ராஜ். கடந்த மாதம் வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காலை 11.30 மணியளவில் லுங்கி அணிந்த ஒருவர் சைக்கிளை ஓட்டி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரங்களோடு புகார் அளித்துள்ள நிலையில், 1 மாதமாகியும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை என நீதிபதி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST