தமிழ்நாடு

tamil nadu

மது வாங்குவதில் தகராறு

ETV Bharat / videos

'சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும்' மதுபோதையில் மாறி மாறி செருப்பால் அடித்துக்கொண்ட நபர்கள்! - Vellore Tasmac clash

By

Published : May 9, 2023, 9:56 AM IST

வேலூர்:  வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சி(Pennathur Town Panchayat) அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடை எண் 11120, 11340 ஆகிய இருகடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக இரு தரப்பினர் வந்துள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே ஒருவருக்கு ஒருவர் வாய் தகறாறு ஏற்பட்டுள்ளது. 

சிறுது நேரத்தில் வாய்த் தகராறு முற்றி கைகளைப்பாக மாறியது. இந்நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி செருப்பால் அடித்தும் மற்றும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் சண்டை போட்டு பேசும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் அரசு பேரூராட்சி அலுவலகம் மற்றும் அப்பகுதி மக்கள் அதிகம் நாடிச் செல்லும் நூலகம் உள்ள இடங்களில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களால் பொதுமக்கள், பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு பெரும் அச்சம் எழுந்துள்ளது. டாஸ்மாக் கடை அருகே நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details