தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி

ETV Bharat / videos

பட்டியலின பெண்ணை தாக்கிய மாற்று சமூகத்தினர் - காவல் துறை நடவடிக்கை என்ன?

By

Published : May 22, 2023, 11:08 PM IST

Updated : May 26, 2023, 8:48 AM IST

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சீ.மலையாண்டிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக். இவரது மனைவி சீத்தம்மாள். கடந்த ஒரு மாதமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீத்தாலட்சுமியும் அவரது கணவர் கார்த்திக்கும் சுய உதவிக் குழு ஒன்றில் ரூ.50ஆயிரம் கடன் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நல்லாம்பள்ளியை சேர்ந்த துளசிமணி என்பவரும் அவரது கணவர் மருதமுத்து உள்ளிட்ட சிலரும் சீத்தாலட்சுமியிடம் குழுவில் பெற்ற கடன் தொகையைக் கேட்டு, மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (மே 22) அங்கு வந்த அவர்கள் சீத்தாலட்சுமியிடம் பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருதரப்பு பெண்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த மருதமுத்து சீத்தாலட்சுமி மற்றும் அவரது தாயார் முருகம்மாள் உள்ளிட்ட இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டியிலின பெண்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், முறையாக வழக்குகள் பதிவு செய்வதில்லை எனத் தெரியவருகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக, பட்டியலின பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated : May 26, 2023, 8:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details