Video : அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடியை அகற்றிய காவல்துறை - Listed Union President Govindan
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் பாரதிய ஜனதா கட்சி பட்டியலின ஒன்றிய தலைவர் கோவிந்தன் தலைமையில் நாளை (செப்-26) கொடியேற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அனுமதி பெறாமல் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்க கூடாது என தெரிவித்தனர். மேலும் உடனடியாக கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என பாஜகவினரிடம் தெரிவித்தனர். உடனடியாக கட்சியினர் கொடி கம்பத்தை அப்பகுதியில் இருந்து அகற்றி விட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST