தமிழ்நாடு

tamil nadu

செயின் திருட்டு சம்பவம் குறித்து மூதாட்டி பேசும் வீடியோ வைரல்

ETV Bharat / videos

"ஏலே பித்தாள.. பித்தாளன்னு கத்தினேன்.. பறந்துட்டான்..!" மூதாட்டியின் வீடியோ வைரல்!

By

Published : Mar 6, 2023, 11:24 AM IST

திருநெல்வேலி:நெல்லை சந்திப்பு பகுதியை அடுத்த கிராமம் அருகன்குளம். இது நகரை ஒட்டிய பகுதி என்றாலும் கிராமம் சார்ந்த சூழலே காணப்படும். இந்த நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த கணபதி என்ற 80 வயது மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியைப் பறித்துள்ளனர்.

பாட்டி சங்கிலியைப் பிடித்துக் கொண்டு ஏலே பித்தளை ஏலே பித்தளை எனக் கத்தியதில் அருகிலிருந்தவர்கள் வந்துள்ளனர். உடனே செயினை பறித்த கொள்ளையன் ஏமாற்றத்துடன் கீழே போட்டு விட்டுச் சென்றுவிட்டான். இந்த நிலையில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சக மக்களிடம் உள்ளூர் வட்டார மொழியில் விளக்கும் கணபதி பாட்டியின் வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் பித்தளை செயினை தற்போது தங்க மூலாம் பூசி வைத்துள்ளதாகக் கூறுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த காட்சியில் மூதாட்டி கணபதி, "மேக்க பாத்து உட்காந்திருந்தேன் வண்டியை விட்டு வந்து டபக்குன்னு அத்துட்டான். ஏலே பித்தாள ஏலே பித்தாளன்னு கத்தினேன் எவன் கேட்டான்" என்று மிக எதிர்த்ததாகப் பேசியது அங்கிருந்தவர்களையே குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்தது.   

எலே..! என்ற வார்த்தை நெல்லை மாவட்டத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாசம் காட்டவும் தவறு செய்தால் கண்டிக்கவும் இந்த எலே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம். நெல்லையில் எலே என்ற வார்த்தைக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு எனவே மூதாட்டி கணபதி ஏலே ஏலே என்று கத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details