Video: கோத்தகிரியில் வாத்தை கவ்விச் சென்ற சிறுத்தை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! - நீலகிரி செய்திகள்
Published : Nov 3, 2023, 6:18 PM IST
நீலகிரி:கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நகர் பகுதியில் உலா வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், சமீப காலமாக கரடி, காட்டு யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வர தொடங்கி உள்ளது.
இன்று(நவ.3) அதிகாலை கொணவக்கரை பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. அப்போது தனியார் விடுதியில் வளர்க்கப்பட்டு வரும் வாத்து ஒன்றை சிறுத்தை கவ்விச் செல்லுவது அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், வனத்துறையினர் இதுபோன்ற வனவிலங்குகள் கிராம பகுதிகளில் உலா வருவதை தடுக்க, பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.