viral video - குடிபோதையில் தடுப்பு வேலிகளை இடித்து தள்ளும் இந்து மகாசபை தலைவர்! - Hindu Mahasabha district leader R G Vasudevan
திருவண்ணாமலை: குடிபோதையில் காவல்துறை தடுப்பு வேலிகளை இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி கீழே விழுந்த அகில பாரத இந்து மகா சபை மாவட்ட தலைவர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருவண்ணாமலை அகில பாரத இந்து மகாசபை மாவட்ட தலைவராக ஆர்.ஜி.வாசுதேவன் உள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவண்ணாமலை கோபுர தெருவில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை முழு போதையில் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்துத் தள்ளி தலைக்குப்பற குடி போதையில் கீழே விழுந்துள்ளார்.
மேலும் அதே தெருவில், அண்ணாமலையார் கோயில் தெற்கு வாசல் பகுதிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த காவல் துறையினரின் தடுப்பு வேலியை முழு போதையில் கீழே தள்ள முயலும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இவர் அடுத்த மாதம் மதுரையில் அகில பாரத இந்து மகாசபை நடத்தும் ஒன்பதாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் தலைமையேற்று கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு போதையில் வாசுதேவன் செய்த நிதானமற்ற செயலில் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.