தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: 'எனக்கும் பசிக்குமில்ல'...மளிகை கடை ஷட்டரை உடைத்து உணவு தேடிய யானைகள்! - கோவை யானை வீடியோ வைரல்

By

Published : May 1, 2022, 8:42 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 7 காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இன்று (மே 1) அதிகாலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தன. அதில் 3 யானைகள் மளிகைக்கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து அரிசி, பிஸ்கட், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளன. பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த வீடியோவை அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டதையடுத்து, தற்போது இக்காணொலி வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details