தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: மழையில் நனையாமல் இருக்க எம்.ஜி.ஆர். சிலைக்கு குடை பிடித்த ரத்தத்தின் ரத்தம்! - He held an umbrella to prevent the idol from getting wet in the rain

By

Published : Aug 11, 2022, 4:53 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

நீலகிரி: அடுத்த கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ''டானிங்டன்'' பகுதியில் குடையுடன் போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை மழையில் நனைவதைக் கண்ட அவர், நுழைவு கேட்டை திறந்து உள்ளே சென்று மேடையில் ஏறி நின்றார். எம்.ஜி.ஆர். மீது உள்ள பற்று காரணமாக,எம்.ஜி.ஆர் சிலை மழையில் நனையாமல் தடுக்கும் வகையில் குடையைப் பிடித்தவாறு சிறிது நேரம் நின்றார். இந்தக்காட்சியை அந்த வழியாக சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தச் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details