"எனக்கு பாய் ஃபிரெண்ட் ஆக 2 கண்டிஷன் தான்": மனம் திறந்த நடிகை மிருணாளினி! - மால டம் டம் மஞ்சர டம் டம் பாடல்
சேலம்: சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், மிருணாளினி ரவி. அதைத் தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா எனப் படங்களில் நடித்துள்ளார். அதில் முக்கியமாக எனிமி படத்தில் வரும் "மால டம் டம் மஞ்சர டம் டம்" பாடல் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
தற்போது சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை மிருணாளினி ரவி கலந்து கொண்டார். அப்போது மிருணாளியிடம் ரசிகர்கள் பல கேள்விகள் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில், 'நடிகர் விஜய், அஜித் இருவருமே பிடிக்கும். நடிகர் விஜய் அவர்களின் நடனம் பிடிக்கும். நடிகர் அஜித் அவர்களின் ஸ்டைல் பிடிக்கும்' என கோர்வையாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'எனது வாழ்க்கையில் எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணி. மேலும் எனக்கு பாய் ஃபிரெண்டாக இருக்க வேண்டும் என்றால், இந்த தகுதி இருந்தால் போதும்' என்று மனம் திறந்து கூறிய நடிகை, 'என்னை எப்பொழுதும் சிரிக்க வைக்க வேண்டும். சந்தோசமாக பார்த்துக் கொண்டால் போதும்' எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். விழா இறுதியில் மாணவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.