தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

போலீஸ் வாகனம் திருட்டு: கேசுவலாக திருடி சென்ற மர்ம நபர்... தீவிர விசாரணை! - மர்ம நபர் கொள்ளை

🎬 Watch Now: Feature Video

போலீஸ் இருசக்கர வாகனம் திருட்டு

By

Published : Apr 20, 2023, 3:02 PM IST

கோயம்புத்தூர்: கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் காவலர்களுக்கான குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஆயுதப்படை காவலர்கள் மற்றும் கோவை மாநகரம், புறநகர் மாவட்டத்தில் பணி புரியும் காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வருபவர், செல்வக்குமார். இவர் தனது குடும்பத்துடன் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தைக் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பின் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார். 

அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காததால் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது, காவலரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர், தனது சொந்த வாகனம் போன்று பதற்றம் இல்லாமல் திருடி ஓட்டிச் செல்வது பதிவாகியுள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு அதிகம் இருக்கும் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, உதவி ஆய்வாளரின் இரு சக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details