Video: கம்பி கட்டிய மயிலம் எம்.எல்.ஏ! - விழுப்புரம் மாவட்ட செய்தி
விழுப்புரம்: கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் ரூபாய் 28 கோடி மதிப்பீட்டில் மேம்பாலப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நடைபெறும் இடத்தில் தற்காலிகப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையானது மண் சாலையாக உள்ளதால் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்வதால், புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து, நேரில் ஆய்வு செய்த மயிலம் பாமக எம்.எல்.ஏ சிவக்குமார் திடீரென்று கட்டுமானப் பணி நடைபெறும் பகுதியில், கீழே குதித்து அங்கு கம்பி கட்ட ஆரம்பித்தார். எம்.எல்.ஏ சிவக்குமாருக்கு கட்டட வேலை தெரியும் என்பதால் அங்கு அமைக்கப்பட்ட கான்கிரீட் கம்பிகளை கட்டத் துவங்கினார்.
திண்டிவனம் அருகே மேம்பாலப் பணி நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்த மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் கம்பி கட்டிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.