Video:செஸ் ஒலிம்பியாட் 2022- தங்க செஸ் காயின்களை செய்து அசத்திய நகை தொழிலாளி - கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி மாரியப்பன்
கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி மாரியப்பன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக செஸ் போர்டை வெள்ளியிலும், அதில் உள்ள காய்களை இரண்டு கிராம் தங்கத்திலும் உருவாக்கி உள்ளார். 32 காய்களும் சேர்த்து 2 கிராம் தங்கத்தில் உருவாக்கி உள்ளார். இரண்டு நாட்களில் செய்யப்பட்ட இந்த செஸ் போர்டை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடம் காண்பித்து விழிப்புணர்வு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளி தகட்டில் வெல்கம் டு இந்தியா 44 வது fide chess olimbiyaad என்ற வாசகத்தை வடிவமைத்ததுள்ளார். இவர் ஏற்கனவே முதலமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தங்கத்தில் சிறிய அளவில் மினியேச்சர் போல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST