தமிழ்நாடு

tamil nadu

பழனி திருக்கோயிலிருந்து மலேசியா முருகன் கோயிலுக்கு வஸ்திர மரியாதை

ETV Bharat / videos

பழனி திருக்கோயிலிருந்து மலேசியா முருகன் கோயிலுக்கு வஸ்திர மரியாதை. - இந்து சமய அறநிலையத்துறை

By

Published : May 19, 2023, 12:55 PM IST

திண்டுக்கல் மாவட்டம்:பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோயிலுக்கு வஸ்திரங்கள் மற்றும் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதில் ‘பிற மாநிலங்கள், பிற நாடுகளில் உள்ள கோயில்களுடன் பாரம்பரிய உறவை மேம்படுத்தவும்,

நல்லிணக்கத்தை பேணவும் வஸ்திர மரியாதை செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அதன் படி பல்வேறு கோயில்களில் இருந்து பிரசாதங்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் படி பழனி அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து இன்று வஸ்திர மரியாதைக்காக மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்து மலை முருகன் கோயிலுக்குப் பொருட்கள் அனுப்பப்பட்டது.

பழனி மலைக் கோயில் மற்றும் உப கோயில்களில் இருந்து பெறப்பட்ட வஸ்திரங்கள், பிரசாதங்கள், விபூதி, மலர் மாலைகள் உள்ளிட்டவைகள் அனுப்பபட்டது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மேள தாளங்கள் முழங்க பிரசாதங்கள் கோயிலைச் சுற்றி வலம் வர செய்யப்பட்டு பின் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:50 வருட பழமையான ஆலமரத்திற்கு உயிர் கொடுத்த தஞ்சை கலெக்டர்!

ABOUT THE AUTHOR

...view details