வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அயோத்தி ராமர் கோயிலுக்கான அட்சதை வழிபாடு! - பாஜக இந்து முன்னணி நிர்வாகி
Published : Nov 29, 2023, 8:03 AM IST
வேலூர்:வேலூரில் அயோத்தி ராமர் கோயிலுக்கான அட்சதை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று (நவ.28) வழிபாடுகள் செய்யப்பட்டது. அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம், வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அயோத்தி ராமர் ஆலய அட்சதை கொண்டு வரப்பட்டது. இதனை அகில பாரத விஸ்வ இந்து பரிஷத் சார்பில், மேளதாளங்கள் முழங்க ராமர், பஜனை பாடல்களை பாடிய வண்ணம் ஊர்வலமாக வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஜலகண்டேஸ்வரிடம் ராமர் அட்சதையை வைத்து, மகாதீபாராதனைகளை செய்து சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. இதில் பாஜக இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பஜனை பாடி வழிபட்டனர். முன்னதாக, அயோத்தி கோயிலில் பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை சென்னை கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டது. பின், இந்த அட்சதை பிரித்தனுப்பும் விழா சென்னை தனியார் பள்ளியில் நடைபெற்றது.