தமிழ்நாடு

tamil nadu

பாஜக பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற வாகனம் விபத்து

ETV Bharat / videos

பாஜக பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற வாகனம் விபத்து... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - 12 பேர் சென்ற வாகனம் விபத்து

By

Published : Jul 28, 2023, 6:57 PM IST

பல்லடம்:கோவையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தனது ட்ரம்ஸ் கலைக்குழுவினர்‌ 12 பேருடன், நேற்று இரவு கோவையில் இருந்து இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் நடைபெறும் பாஜக பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே, மாதப்பூர் என்ற இடத்தில், பல்லடம் நோக்கி வந்த இரண்டு கனரக வாகனங்கள், அவர்கள் வந்த வேன் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோவையைச் சேர்ந்த டிரம்ஸ் கலைஞர்கள் கௌதம், சரவணன், சபரீஷ், மனோஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்லடம் அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கனரக வாகன ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவருக்கு தலை மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேற்று நள்ளிரவு நடந்த இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details