தமிழ்நாடு

tamil nadu

நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டிய தலையாரி

ETV Bharat / videos

நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டிய கிராம உதவியாளர் -வெளியான பகீர் ஆடியோ! - கிராம நிர்வாக உதவியாளர்

By

Published : Aug 5, 2023, 12:39 PM IST

Updated : Aug 5, 2023, 3:09 PM IST

தென்காசி:கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் ஊரைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரின் குடும்ப சொத்து தெற்கு மடத்தூர் பகுதியில் உள்ளது. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். தற்போது வரை இந்த சொத்து, பிரிவினை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய மகள் கல்யாணி என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே தனது பங்கை திருமலையப்பபுரம் சுப்பிரமணியன் என்பவருக்கு விற்பனை செய்து உள்ளார். 

தற்போது அந்த சுப்பிரமணியன் என்பவருக்கும், பூர்வீக சொத்தினை கையில் வைத்திருக்கும் பேச்சிமுத்து குடும்பத்தினருக்கும் உள்ள இடங்களை அளந்து கொடுத்து பிரிவினை செய்ய வேண்டும் என்று பேச்சிமுத்து மகன் வழி பேரன் முத்துராமன் கிராம நிர்வாக உதவியாளர் (விஏஓ உதவியாளர்) தங்கமணி என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  

இது சம்பந்தமாக விஏஓ உதவியாளர் பேசுகையில், முதலில் நிலத்தை அளந்து கொடுத்து விடலாம் என்றும், அதற்கு பிறகு முத்துராமனிடமிருந்து லஞ்சம் வாங்கிய பிறகு, கூடுதலாகவும் பணம் கேட்டு பேசி மிரட்டியுள்ளார். மேலும் அந்த நிலத்தை விற்பனை செய்யும் வகையில் இடத்திற்கு இவரே விலை தீர்மானம் செய்து இந்த விலைக்கு கொடுத்து விடுங்கள் எனவும் நில உரிமையாளரிடம் கறாராக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

மேலும் இந்த விஏஓ உதவியாளர் தங்கமணி என்பவர் தெற்கு கடையம் பகுதியில் தலையாரியாக பணியாற்றியவர். லஞ்ச ஒழிப்பு துறை புகாருக்கு பின்னர் இந்தப் பகுதிக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 5, 2023, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details