வாணியம்பாடியில் தெருநாய்களுக்கு நகராட்சி அதிகாரிகள் உணவு வழங்கவில்லையா? - stray dogs in vaniyambadi
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களை, நகராட்சி ஊழியர்கள் பிடித்து, கோட்டைப் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளனர். ஆனால், நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்ட நாய்களுக்கு, தண்ணீர் மற்றும் உணவுகள் ஏதும் முறையாக வழங்காமல், நகராட்சி நிர்வாகம் நாய்களை கொடுமைப்படுத்துவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் தரப்பில் நகராட்சி ஆணையர் மாரிசெல்வியிடம் கேட்டபோது, “வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி பகுதிகளில், அதிக அளவிலான தெருநாய்கள் சுற்றித் திரிவதாகப் புகார் வந்தது. இதனையடுத்து தெருநாய்கள் நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டது. இந்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கவே, நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்களுக்கு, நாளை கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறோம். அதுவரையில், நாய்களுக்கு உரிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.