வாணியம்பாடியில் எருதுவிடும் விழா; நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு! - vaniyambadi
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தில் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. குறைந்த நேரத்தில் இலக்கை கடந்த காளைக்கு முதற்பரிசாக 66,666 ரூபாயும், இரண்டாவது பரிசாக 55,555 ரூபாயும் மூன்றாவது பரிசாக 44,444 ரூபாய் என மொத்தம் 52 பரிசுகள் வழங்கப்பட்டன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இவ்விழாவில் பாதுகாப்புப்பணியில் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST