valentines day: ஆதலால் காதல் செய்வீர்.. நெல்லையில் களைகட்டிய காதலர் தினம்! - Nellai district news
உலகம் முழுவதும் இன்று (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட காதல் தம்பதியினர், ‘ஆதலால் காதல் செய்வீர்’ என எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி கொண்டாடினர்.
பின்னர் அவர்கள் எடுத்து வந்த ஜோடிப்புறாக்கள் அனைத்தையும் வானில் பறக்க விட்டும், இனிப்புகளை வழங்கியும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது அனைவரும் ‘சமத்துவம் பேசும் காதலை, காதலர் தினத்தை அன்போடு வரவேற்போம், காதல் உண்டு, அன்பு உண்டு’ என கோஷம் எழுப்பினர்.