கீழ்பென்னாத்தூர் வெட்காளியம்மனுக்கு வளைகாப்பு விழா - Kil Pennathur amman temple
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் அடுத்த கல்பூண்டி கிராமத்தில் எழுந்தருளி உள்ளது ஸ்ரீ வெட்காளியம்மன் கோயில். இந்த கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நேற்று (மார்ச் 7) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த வளைகாப்பு திருவிழாவில் முதலில் அதர்வன பத்திரகாளி ஹோமம் நடைபெற்றுது. அதை தொடர்ந்து பக்தர்கள் பழம், இனிப்பு, காரம், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்ட தட்டு சீர்வரிசைகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். அதன் பின்னர் ஸ்ரீ வெட்காளியம்மனுக்கு கீழ்பென்னாத்தூர் வழக்கப்படி வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஸ்ரீ வெட்காளியம்மன் சிவனை வழிபட்டு பூமி பூஜை செய்யும் நிகழ்வும் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் கல்பூண்டி பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.