Vaikunta Ekadasi: ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 6-ம் நாள் விழா கோலாகலம்! - பகல் பத்து 6ம் நாள் விழா
திருச்சி: புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. பகல் பத்து விழாவின் 6ஆம் நாளான இன்று (டிச.28) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சிவப்பு சிக்குத் தாடை கொண்டை கலங்கதுரை பதக்கம், வைர அபயஹஸ்தம், அடுக்குப்பதக்கம் பவள மாலை, முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி எழுந்தருளினார். பின்னர் ராமானுஜர், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் தொடர்ந்து வர வழியெங்கும் அரையர்கள் சேவையின்போது திருமொழி பாசுரங்களை கேட்டருளி, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST