தமிழ்நாடு

tamil nadu

வைகாசி விசாகம் முடிவுற்ற நிலையில் கோயில் வளாகத்தில் மீன் சமைத்து பக்தர்கள் விரத நிவர்த்தி!

ETV Bharat / videos

வைகாசி விசாகம் நிறைவு.. கோயில் வளாகத்தில் மீன் சமைத்து விரதத்தை முடித்த பக்தர்கள்! - tamil news

By

Published : Jun 4, 2023, 12:04 PM IST

தூத்துக்குடி:உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய திருவிழாவான வைகாசி விசாக திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். முருகன் அவதரித்த நட்சத்திரமான விசாகம் நட்சத்திரமே வைகாசி விசாகம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

விசாக திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதனை தொடர்ந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி இருந்து மீன் சமைத்து விரதத்தை முடித்து செல்வார்கள். 

இந்த நிலையில் வைகாசி விசாகம் நிறைவடைந்த நிலையில் கோயில் வளாகத்தில் பல்வேறு குடும்பத்தினர் மீன் குழம்பு சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டு தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். முருகன் கோவில் வளாகத்தில் பாரம்பரியமாக அசைவம் சமைத்து சாப்பிடும் பக்தர்களால் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

இதையும் படிங்க:ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு சுவாமிமலையில் கூட்டு பிரார்த்தனை

ABOUT THE AUTHOR

...view details