அண்ணாமலையார் கோயிலில் சிறப்பாக நடைபெற்ற வைகாசி மாத பிரதோஷம்! - Tiruvannamalai news
திருவண்ணாமலைஅண்ணாமலையார் திருக்கோயிலில் வைகாசி மாத குருவார தேய்பிறை பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் நந்தி பகவானை வழிபட்டனர். அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள ஐந்து நந்தி பெருமானுக்கும் அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருவண்ணாமலை ஸ்ரீ அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் உள்ள 5 நந்தி பெருமானுக்கும் ஒரே காலத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
வைகாசி மாத குருவார தேய்பிறை பிரதோஷ தினத்தில் அக்னி ஸ்தலத்தில் சுயமாக தோன்றிய அண்ணாமலையார் திருத்தலத்தில் வீற்றிக்கும் 5 நந்தி பெருமானை பிரதோஷ காலத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஆயிரம்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், அபிஷேகத் தூள் போன்றவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வில்வ இலைகள் மற்றும் மலர்களால் நந்தி பகவான் அலங்கரிக்கப்பட்டு, அவைகளால் அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வைகாசி மாத குருவார தேய்பிறை பிரதோஷத்தில் நந்தி பகவானை வழிபட்டனர்.