ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட காட்சி! - Child Slipped in bore well
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். பெற்றோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த நேரத்தில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்பு பணி நடந்த நிலையில், 2 மணி நேரம் போராடி குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST