தமிழ்நாடு

tamil nadu

வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வாடிக்கையாளர்களுக்கு பனிச்சாரல்! தேநீர் கடையின் புது முயற்சி!

By

Published : Apr 23, 2023, 1:23 PM IST

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெயிலில் வெப்பத்தை தணிக்க தேநீர் கடை எடுத்த வித்யாசமான முயற்சி

ராணிப்பேட்டை:தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொடர்ச்சியாக வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வருகின்றது. இந்த வெயிலின் கொடுமையால் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கன்னிகாபுரம் CMC மருத்துவமனை அருகே தென்றல் என்ற தேநீர் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் கடை உள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் இளைப்பாற புது முயற்சியாக, இந்தக் கடை வளாகத்தில் ''மிஸ்ட்'' எனக் கூறப்படும் பனிச்சாரல் தெளிப்பதுபோல் நவீன இயந்திரம் மூலம் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்றுநேரம் இளைப்பாறி வெயிலை மறந்து நிம்மதியாக தேநீர் மற்றும் உணவுப்பொருட்களை உண்டு செல்கின்றனர். வெயிலின் கொடுமையைத் தணிக்க இக்கடை எடுத்துள்ள புதுமையான முயற்சி அக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களால் பாராட்டப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details