கார்கில் போர் நினைவு நாள் - மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட்
டெல்லி:கார்கில் போர் நினைவு தினம் இன்று(ஜூலை 26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட், முப்படை தளபதிகளான ஜெனரல் மனோஜ் பாண்டே (இந்திய ராணுவம்), மார்ஷல் விஆர் சதுரி(இந்திய வான்படை), மற்றும் ஆர் ஹரி குமார்(இந்திய கடற்படை ) ஆகியோரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST