தமிழ்நாடு

tamil nadu

அமலாக்கத்துறை விதிமுறை மற்றும் சட்டதிட்டங்கள் படி செயல்படுகிறது என சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்

ETV Bharat / videos

அமலாக்கத்துறை விதிமுறை மற்றும் சட்டதிட்டங்கள் படி செயல்படுகிறது - சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி

By

Published : Jun 18, 2023, 10:28 PM IST

சென்னை:கிழக்கு கடற்கரைச் சாலை, பாலவாக்கம் கடற்கரையில் பாஜக மருத்துவப்பிரிவு சார்பில் மோடி ஆட்சி குறித்து மணல் சிற்பம் வரையப்பட்டது. அந்த மணல் சிற்பம் ஜி20 மாநாட்டைக் குறிக்கும் வகையிலும், கரோனா கால கட்டங்களில் வழங்கப்பட்ட மருந்துகள் அதற்கான செலவினங்கள் குறித்தும், நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய செங்கோல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வண்ணம் இருந்தது.

இந்த மணல் சிற்பத்தை, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். பின்னர் கிஷன் ரெட்டி பெசன்ட் நகரில் மீனவர்கள் குறைகள் கேட்பு முகாம் மற்றும் 102வது மனதின் குரல் நிகழ்வில் கலந்து கொண்டு மீனவ மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதில் பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மகளிர் சுய உதவிக் குழுவைத் தொடங்க பாஜகவினர் பெண்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தினார். அவர்களுக்கு 20 லட்சம் வரை கடன் வழங்கத் தான் உதவுவதாகத் தெரிவித்தார். ரேஷன் அரிசி, கரோனா தடுப்பூசி இவையெல்லாம் கிடைத்ததா எனவும் மக்களிடம் அவர் வினவினார். பின் மக்களோடு அமர்ந்து மனதின் குரல் நிகழ்வைக் கண்டு களித்தார். 

அதனையடுத்து திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பிரச்சார வாகனத்தை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இறுதியாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளைப் பட்டியலிட்டார். தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி குறித்துக் கேட்டதற்குத் தேர்தல் முதலில் வரட்டும், பிறகு சொல்வதாகத் தெரிவித்தார். 

பாஜக அரசியலுக்காக அமலாக்கத்துறையைப் பயன்படுத்துவதாக பேசப்படுகிறதே என்று கேட்டதற்கு “அது அவர்களுடைய அரசியல் அறிக்கை, அமலாக்கத்துறை அரசியலுக்காகச் செயல்படாது. விதிமுறைகள், சட்டதிட்டங்கள் படி தான் செயல்படும். அமலாக்கத்துறை வீட்டில் அமர்ந்து கொண்டிருக்காது சோதனை செய்யத்தான் செய்யும். சிபிஐ, அமலாக்கத்துறை நாட்டின் வளர்ச்சிக்காக வேலை பார்க்கிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details