தமிழ்நாடு

tamil nadu

உதயநிதி ஸ்டாலினின் விளம்பர பேனர்கள் திடீர் அகற்றம்

ETV Bharat / videos

நெல்லையில் உதயநிதி ஸ்டாலினின் விளம்பர பேனர்கள் திடீர் அகற்றம் - காரணம் என்ன? - நெல்லை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 9:38 AM IST

திருநெல்வேலி: திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலையே திருநெல்வேலிக்கு வந்தார். அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, திமுக கட்சி தொண்டர்கள் சார்பில் திருநெல்வேலி மாநகரின் பிரதான நெடுஞ்சாலை பகுதிகளில் வரவேற்பு பதாகைகளை வைத்திருந்தனர்.  

ஆனால், உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டதாக திருநெல்வேலியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.  

இதனை அடுத்து, திருநெல்வேலியில் மாநகர காவல் துறையின் பாதுகாப்போடு, மாநகரில் பிரதான நெடுஞ்சாலைப் பகுதிகள் மற்றும் இதர பகுதிகளில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டது. 

முதலில் 18ஆம் தேதி அமைச்சர் உதயநிதி திருநெல்வேலி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று (அக்.27) மாற்றப்பட்டது. ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பே மாநகரம் முழுவதும் திமுக நிர்வாகிகள் சார்பில் விளம்பரப் பதாகைகள் வைத்திருந்தனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து பதாகைகளும் அகற்றப்பட்டு வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details