தமிழ்நாடு

tamil nadu

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு

ETV Bharat / videos

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கால அவகாசம் கேட்ட சிபிசிஐடி - மீண்டும் வழக்கு தேதி ஒத்திவைப்பு - நீலகிரி செய்திகள்

By

Published : Mar 21, 2023, 7:10 PM IST

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, சிபிசிஐடி போலீசார் இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், செல்போன் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டதாலும் வழக்கு மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று இந்த விசாரணை நடைபெற்றபோது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி முருகவேல், தலைமையிலான போலீசாரும் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் சயான், வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜரானார்கள். 

வழக்கு விசாரணைக்குப் பின் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், "இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் சேகரிக்க வேண்டி உள்ளதால் கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து" நீதிபதி உத்தரவிட்டதாகத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details