உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்..! திமுக நிர்வாகிகள் அதிருப்தி! என்ன காரணம்? - உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
Published : Nov 27, 2023, 9:46 PM IST
|Updated : Nov 27, 2023, 11:12 PM IST
தஞ்சாவூர்: திமுக இளைஞரணி மாநில செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் விழா திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு திமுக நிர்வாகிகள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதில் திமுக மண்டலத் தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி பகுதி செயலாளர் கார்த்தி கவுன்சிலர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுவாக திமுக கட்சி நிகழ்ச்சிகள் என்றாலே பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் உருவ சிலைகளுக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். ஆனால், இன்று நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோருக்கு மாலை அணிவிக்காமல் நிகழ்ச்சியை கொண்டாடினர்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 22ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சை செவித்திறன் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.