தமிழ்நாடு

tamil nadu

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ETV Bharat / videos

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - accident cctv footage

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 10:03 AM IST

Thoothukudi bike accident: தூத்துக்குடி:  ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் மகன் இசக்கிபாண்டி. அதே ஊரைச் சேர்ந்த திருமலை நம்பி மகன் மகேஷ். ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் ஆதி. இவர்கள் மூவரும் நேற்று (செப். 4) இரவு உறவினர் திருமண விழாவிற்காக கிருஷ்ணாபுரம் சென்று விட்டு, ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். 

அப்போது செய்துங்கநல்லூர் இந்தியன் வங்கி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த பைக் மீது இவர்கள் வந்த பைக் மோதியது. இதில் இசக்கிபாண்டி, மகேஷ், ஆதி மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details