திருப்பத்தூர் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! - police investigation
Published : Oct 27, 2023, 9:12 AM IST
திருப்பத்தூர்:வெலக்கல்நாத்தம் பகுதியில் கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நாத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் ராஜேந்திரன் (58). இவர் அதே பகுதியில் NPR என்ற பெயரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, காலை மறுபடியும் கடையை திறக்கச் சென்றபோது, கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் அந்த இடத்தில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு, அவர் கடையின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சென்று பார்த்துள்ளார்.
அதில், மர்ம நபர் ஒருவர் கடையின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. பின், அவர் நாட்றம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், நாட்றம்பள்ளி போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.