தமிழ்நாடு

tamil nadu

தேனி புதிய பேருந்து நிலையத்தில் சாமியார்கள் சண்டை

ETV Bharat / videos

தேனியில் ஆபாசமாக பேசி முதியவரை தாக்கிய இருவர்.. வைரலாகும் வீடியோ! - Theni New Bus Stand fight

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 11:50 AM IST

Updated : Nov 30, 2023, 2:26 PM IST

தேனி: தேனி புதிய பேருந்து நிலையத்தில் சாமியார் தோற்றத்தில் இருக்கும் இரு நபர்கள், முதியவர் ஒருவரை சரமாரியாக அடித்து, ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தேனி புதிய பேருந்து நிலையத்தில் சாமியார் தோற்றத்தில் உள்ள இருவர், முதியவரான ஒரு பயணியை ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அந்த பயணியிடம் சாமியார் தோற்றத்தில் இருந்த இருவர் யாசகம் கேட்டதாகவும், அதற்கு அந்த முதியவர் "கை-கால்கள் நன்றாகத்தானே இருக்கிறது. உழைத்து சாப்பிட வேண்டியதுதானே" என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இதில் முதியவரான பயணிக்கும், சாமியார் வேடத்தில் இருக்கும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே, சாமியார் வேடத்தில் இருந்த இருவர் பயணியை சரமாரியாக அடித்து சட்டையை கிழித்துள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சாமியார் தோற்றத்தில் உள்ள பலர், ஆங்காங்கே அமர்ந்து யாசகம் கேட்டு பிரச்னையில் ஈடுபடுவதாக தேனி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Last Updated : Nov 30, 2023, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details