தமிழ்நாடு

tamil nadu

பழங்குடியின பெண்களின் கும்மி பாடல்

ETV Bharat / videos

மழை வேண்டி பூஜை.. திரும்ப கேட்கத் தூண்டும் பழங்குடி பெண்களின் கும்மி பாட்டு! - ஈரோடு கடம்பூர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 2:39 PM IST

ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான மானாவாரி நிலங்களில் ராகி, மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். தற்போது மழையை எதிர்ப்பார்த்து 3 மாத பயிரான மக்காச்சோளம் கடந்த மாதம் பயிரிடப்பட்டது. மேலும் பழங்குடியினர் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்துகொள்ள ராகி பயிர் சாகுபடி செய்வது வழக்கம்.

இந்தாண்டு பருவமழை பொய்த்துப்போனதால் கடம்பூர் மலைப்பகுதியில் பயிர்கள் வாடுகின்றன. மழை இல்லாததால் பெரும்பாலான நிலங்கள் தரிசாக காணப்படுகிறது. இதையடுத்து மழை வேண்டி கிராமங்களில் மக்கள் வழிபாடு நடத்துகின்றனர். குன்றி மலைக்கிராமத்தில் பயிர்கள் வாடுவதை கண்டு மக்கள் மழை வேண்டி வழிபாடு நடத்தினர்.

குன்றி விநாயகர் கோயிலுக்கு முன் பெண் குழந்தையை தெய்வமாக வழிபட்டு தீபமேற்றினர். பெண் குழந்தை பூமியை தாயாக வணங்கி அமர்ந்திருக்க குழந்தையை சுற்றி பழங்குடியினர் பெண்கள் ஏலேலோ, தன்னானே நானே என கிராம ராகத்துடன் பாடி வருண பகவானை வேண்டினர். அப்போது பழங்குடியின பெண்களின் கிராமிய பாடல் கேட்போரின் காதுக்கு இனிமையாக இருந்ததாக தெரிவித்தனர். 

ABOUT THE AUTHOR

...view details