கூத்தாண்டவரை தரிசிக்க தனி வரிசை இல்லை - திருநங்கை வழக்கறிஞர் சத்யாஸ்ரீ - கூத்தாண்டவரை தரிசிக்க தனி வரிசை கூட இல்லை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கூத்தாண்டவரை தரிசிக்க தனி வரிசை இல்லை என இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யாஸ்ரீ குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எங்களின் குறைகளை முறையிடதான் அய்யனை வழிபட வருகிறோம். கடவுளை காண எங்களுக்கு என்று தனி வரிசை கிடையாது. எங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த வரிசையில் ஆண், பெண் என இருவரும் வருவதால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. வயதானவர்களும் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இது பற்றி காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தால் உரிய பதில் அளிக்க மறுக்கிறார்கள்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST