மீண்டும் துவங்கிய ஊட்டி மலை ரயில் சேவை.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Published : Nov 8, 2023, 2:15 PM IST
நீலகிரி: மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான ரயில் சேவை 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் சாய்து மண் சரிவு ஏற்படுட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக, உதகை மலை ரயில் பாதையில் உள்ள கல்லாறு மற்றும் ஆர்டர்லி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்ற வந்தது.
இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணியளவில் புறப்பட்ட மலை ரயில், ஹில்கிரோ பகுதியில் மரங்கள் சாய்ந்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு ரயில் சேவையாது மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.