தமிழ்நாடு

tamil nadu

வரலாற்றிலேயே விவசாயிகளிடம் இருந்து ரூ.100க்கு தக்காளி கொள்முதல்

ETV Bharat / videos

வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயிகளிடம் இருந்து ரூ.100க்கு தக்காளி கொள்முதல்! தாளவாடி விவசாயிகள் மகிழ்ச்சி.. - விவசாயிகள்

By

Published : Jul 29, 2023, 11:01 PM IST

ஈரோடு:தாளவாடி வட்டாரத்தில் கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி ,தலமலை அருள்வாடி போன்ற 40க்கும் மேற்பட்ட கிராங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். 

தாளவாடி பகுதியில் ஆண்டு தோறும் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தக்காளி விலை குறைந்ததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாலும் உரம் மருந்து விலை உயர்வால் விவசாயிகள் கடந்த ஆண்டு தக்காளி பயிர் செய்வதை விட்டு விட்டனர். 

இந்த ஆண்டு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தக்காளி சாகுபடி செய்திருந்தனர். அதேபோல அருகில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர், குண்டல்பேட், கொள்ளேகால், ஆகிய பகுதிகளிலும் குறைந்த அளவே தக்காளி சாகுபடி செய்திருந்தனர். 

இந்தாண்டு தக்காளி விலை உச்சத்தை தொட்ட நிலையில் மற்றும் தக்காளி எங்கும் இல்லாத காரணத்தால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாய தோட்டத்தில் வந்து தக்காளியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர். இதனால் தக்காளி விலை கிடு கிடு கிடு என உயர்ந்தது கடந்த சில நாட்களாக 70 ரூபாய் மற்றும் 80 ரூபாய்க்கு வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வந்தனர். 

நேற்று தக்காளி ரூபாய் 90க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இன்று 10 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு வியாபாரிகள் விவசாயிகளிடம் தக்காளியை கொள்முதல் செய்தனர். தாளவாடி வரலாற்றிலேயே முதன்முறையாக விவசாயிகளிடம் கிலோ 100 ரூபாய்க்கு வியாபாரிகள், தக்காளியை கொள்முதல் செய்வது இதுவே முதல்முறை என தாளவாடி விவசாயிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details