‘செங்கோலை இவ்வளவு நாள்கள் ஏன் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவில்லை’ - டி.ஆர். பாலு எம்பி கேள்வி! - ஜவஹர்லால் நேரு
சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியில் பல்லாவரம் வடக்கு பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, அமைச்சர் தா.மோ. அன்பரசன், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி, தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மேடையில் பேசுகையில், “ஜவஹர்லால் நேரு செங்கோலை கைத்தடி போல் பயன்படுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வன்முத்துடன் பேசி இருப்பதாக குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டு காலமாகிய நிலையில் ஜவஹர்லால் நேருவின் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த செங்கோலை ஏன் இந்த அரசு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவில்லை” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “கிண்டி கிங்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவிலும், கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் குடியரசு தலைவர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. விட்டுக் கொடுக்க மனம் இல்லாத காரணத்தினால் இன்று நாடாளுமன்ற புதிய கட்டடத்தை மோடி திறந்து வைத்திருக்கிறார்” என்றார்.
முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “திமுகவில் திரும்பாட செயல்படும் இளைஞர்களை கழகத்தின் மூத்த நிர்வாகிகள் தங்கள் சுயநலத்திற்காக அவர்களை ஒழிக்க நினைக்கின்றனர். இனிவரும் நாட்களில் திமுகவில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே பதவி கிடைக்கும்.
திமுக செயல்வீரர்கள் கூட்டம் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. செயல்வீரர்கள் பிரியாணி பொட்டலங்களை வாங்க முண்டியடித்துக் கொண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:IT Raid: 3வது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு! நாளையும் நீடிக்குமா?