ஆபத்தை உணராமல் வன விலங்குகளுடன் போட்டோ மற்றும் செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! - Bison
Published : Dec 5, 2023, 6:22 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இங்கு வன விலங்குகளான காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் என பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, குன்னூர் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் யானைகள், காட்டெருமைகள் உலாவிக் கொண்டிருக்கும் போது, அவ்வழியே வரும் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி அப்பகுதிக்குச் சென்று வனவிலங்குகளுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது.
முன்னதாக, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் கூறி உள்ளனர். ஏனென்றால், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் தாக்கி பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி வனவிலங்குகளுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
எனவே, சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினரால் வலியுறுப்படுகிறது. மேலும், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லவும், அதிக ஒலி எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.