தமிழ்நாடு

tamil nadu

ஊட்டி, குன்னூர்

ETV Bharat / videos

ஊட்டியில் களைகட்டத் தொடங்கிய சீசன்... சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பால் விழாக் கோலம்! - Ooty Coonoor tourist crowd

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 10:55 AM IST

நீலகிரி:  உதகை குன்னூர் பகுதியில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசன் ஆரம்பமாக உள்ள நிலையில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.

குறிப்பாக, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களைக் கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் வாடகை வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, டால்பின் நோஸ் பகுதியில் காட்சியளிக்கும் கேத்தரின் நீர் வீழ்ச்சி, பழங்குடியினர் குடியிருப்பு, அரிய வகை வனவிலங்குகள் உள்ளிட்டவைகளை காணச் சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குன்னூரிலிருந்து டால்பின் ஹவுஸ் செல்லும் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதைத் தொடர்ந்து, போலீசார் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், உதகை குன்னூர் பகுதியில் தயாரித்து விற்பனை செய்யப்படும் ஹோமேட் சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details